Home தொழில்நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

0

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வருடாந்த செப்டெம்பர் நிகழ்வையொட்டி  ஐபோன் 16 (iPhone 16) சாதனத்தை அறிமுகப்படுத்துவதுடன் 6 தற்போதுள்ள 6 சாதனங்களை இடைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கமைய,  ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 13,  ஏர்போட்ஸ் 2 மற்றும் ஏர்போட்ஸ் 3  ஆகியவை இடைநிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் தனது வருடாந்த செப்டெம்பர் நிகழ்வை இந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் தேதி குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடத்தவுள்ளது. 

செப்டெம்பர் நிகழ்வு 

‘இட்ஸ் க்ளோடைம்’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வில் டிம் குக் தலைமையிலான நிறுவனத்தின் 4 புதிய ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல், ஆப்பிள் புதிய ஐபோன் தொடரின் வெளியீட்டில் சில முந்தைய தலைமுறை சாதனங்களை நிறுத்த வாய்ப்புள்ளது.

இதற்கமையவே, ஐபோன் 16 சாதனத்தை அறிமுகத்தை தொடர்ந்து குறித்த 6 சாதனங்களும் இடைநிறுத்தப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version