செம்மணி தொடர்பில் ஆரம்பத்தில் வெளிவந்த உண்மைகள் அனைத்தும் இரவிரவாக மூடிமறைக்கப்பட்டதாக தமிழ் அரசியல்வாதி ஒருவரால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிரிசாந்தி படுகொலையின் பின்னணியில் வெளிவந்த இந்த உண்மைகள் மற்றும் குற்றவாளி குறிப்பிட்ட முக்கிய இடங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தால் இரவோடு இரவாக அகழப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
1990களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான பயங்கரமான நிகழ்வுகளைக் குறிக்கும் செம்மணி அவலத்தில் வெளிப்படதா உண்மைகள் பல இதில் உள்ளதாகவும் குறித்த
அரசியல்வாதி வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டிய முக்கிய விவகாரமான செம்மணி படுகொலைக்கு ஆதரவாக தமிழ் சமூகமும், சர்வதேசமும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த அரசியல்வாதி தொடரும் காணொளியில் விளக்கியுள்ளார்…
https://www.youtube.com/embed/yUQrcMtb_5Q
