Home விளையாட்டு பொதுநலவாய போட்டி 2026: முக்கிய விளையாட்டு போட்டிகள் நீக்கம்

பொதுநலவாய போட்டி 2026: முக்கிய விளையாட்டு போட்டிகள் நீக்கம்

0

2026 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய போட்டியில் (Commonwealth Games) 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பு (CGF)  இன்று (22) அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டு போட்டி ஜூலை 23ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை ஸ்காட்லாந்தின் (Scotland) கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது.

பொதுநலவாய போட்டி

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப்போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

கடைசியாக பொதுநலவாய போட்டியானது இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளதுடன் இறுதியாக 2014-ல் நடைபெற்றது.

விளையாட்டுகள் நீக்கம்

இந்நிலையில் ,ஹொக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை.தற்போதும் சேர்க்கப்படவில்லை.

செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை இடம் பெற்ற போட்டியில் 7 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version