Home இலங்கை சமூகம் இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் மலேரியா!

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் மலேரியா!

0

இலங்கையில் இந்த வருடம்  இதுவரை  09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியவர்களின் மத்தியிலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல்

மலேரியா நோயாளர்கள்

இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக சமூக மருத்துவ நிபுணர் புபுது சூளசிறி குறிப்பிட்டுள்ளார்.

அந்த நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைகளுக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்யச் சென்றவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய சாட்சியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version