Home இலங்கை சமூகம் மக்களுக்கு கையளிக்கப்படவிருக்கும் இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள்

மக்களுக்கு கையளிக்கப்படவிருக்கும் இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள்

0

இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் நான்கு கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் ஏழு கிராமங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் வாங்கவுள்ளோருக்கான முக்கிய அறிவித்தல்

வீடமைப்புத் திட்டங்கள்

இதனால் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 90 கிராமங்களில் 1668 வீடுகள் கட்டும் பணி இதுவரை துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 732 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் நான்கு வீடமைப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய மட்டத்திலான வீடமைப்புத் திட்டம் தென் மாகாணம், கிராம சக்தி வீட்டுத் திட்டம், வடக்கு மாகாணம், கிராம சக்தி வீடு திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய நான்கு திட்டங்களாகும்.

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்திய அரசாங்கம் 

இத்திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு 600 வீடுகள் என்பதோடு மொத்தமாக 2400 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்காக இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட தொகை 2400 மில்லியன் ரூபாவும் அத்தோடு ஏற்கனவே 807 மில்லியன் ரூபாவும் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1592.7 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தவிர அனுராதபுரம், மஹாவிலச்சிய, அலபத் கிராமம் மற்றும் பூஜ்ய மாதுருவாவில் உள்ள சோபித நினைவு கிராமத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

நிர்மாணப் பணிகள் 

அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 450 மில்லியன் ரூபா அத்தோடு இக்கிராமத்தில் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை 115 ஆகவுமுள்ளது.

அரசாங்க நிதியில் 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 90 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய உதவியின் கீழ் தோட்டபுற வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படைப் பணிகளும் இடம்பெற்று வருவதுடன் 8445 தோட்டபுற வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 23646 மில்லியன் ரூபாவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளை நிர்மாணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்த ஈரான் அதிபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version