Home ஏனையவை ஆன்மீகம் மலேசியா அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய கும்பாபிஷேக பெருவிழா

மலேசியா அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய கும்பாபிஷேக பெருவிழா

0

மலேசியா –  தாமான் லோட் 6892 ஜலான் ஹஜி செந்தோசா காப்பார் சிலாங்கூர்
அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய நூதன புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது நேற்று முன்தினம்(12.07.2024) யாக வேள்விவேதம், திருமறை பாராயணங்களோடு
காலை 10:20 க்கு தேவி ஸ்ரீ காப்பாரூர் அன்னை ஆதிபராசக்தி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் ,கோபுர கலசங்களுக்குமான மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வு

அத்துடன், மகேஷ்வர பூஜையினை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது.

கும்பாபிஷேக கிரியைகள் யாவும் இலங்கை திருநாட்டில் சபரகமுவ மாகாணம் இரத்தினபுரி, டேனகந்த அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ உஷாங்கன் சர்மா தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version