Home இலங்கை சமூகம் காணாமல் போன மலேசிய விமானத்துக்கு என்ன நடந்தது..! இன்று வரை விலகாத மர்மம்

காணாமல் போன மலேசிய விமானத்துக்கு என்ன நடந்தது..! இன்று வரை விலகாத மர்மம்

0

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது, நம்ப முடியாத ஒரு விடயம் என 35,000 மணித்தியால பறக்கும் அனுபவத்தைக் கொண்ட விமானியான ஸ்ரீ சேகரம் தெரிவித்தார்.

லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏனைய கிரகங்களுக்கு செல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், காணாமல் போன விமானமொன்றின் பாகங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படாமல் இருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நகைச்சுவையாக கூறிய பதில்

அத்துடன், குறித்த விமானத்தின் விமானியே ட்ரான்ஸ்பொண்டரை(Transponder) நிறுத்தி விட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி தற்போது எங்காவது வசதியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடும் என அவர் நகைச்சுவையாக தெரிவித்தார்.

ட்ரான்ஸ்பொண்டர் என்பது விமானம் எங்குள்ளது என்பதை காட்டக்கூடிய ஒரு கருவியாகவும். இது விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version