Home இலங்கை அரசியல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து மைத்திரி விளக்கம்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து மைத்திரி விளக்கம்

0

ஊழல் மோசடி குற்றச்சாட்டு குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் அளித்துள்ளார்.

அனுராதபுரம் எப்பாவெல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உப தலைவரினால் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு முற்றிலும் பொய்யான போலித் தகவல்கள் அடங்கியது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் கட்டடமொன்றை நிர்மானித்தல் தொடர்பில், இரண்டு கோடியே எழுபத்து ஐந்து லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பலநோக்கு கூட்டறவு சங்கத்தின் உப தலைவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்யானவை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு குறித்த எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை எனவும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version