Home உலகம் மாலைதீவு அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்த பெண் அமைச்சர்: அதிர்ச்சியில் மக்கள்

மாலைதீவு அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்த பெண் அமைச்சர்: அதிர்ச்சியில் மக்கள்

0

மாலைதீவு (Maldives) அதிபர் முகமது முய்சுவுக்கு (Mohamed Muizzu) எதிராக பில்லி, சூனியம் வைத்த சந்தேகத்தின்பேரில் அந்நாட்டின் பெண் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் (Fatima Shamnas) மாலைதீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக சந்தேகத்தின் பேரில் பாத்திமா வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், சூனியம் தொடர்பான பல பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து பாத்திமா ஷம்னாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறை தண்டனை

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலைதீவில், பண்டிதா அல்லது சிஹூரு என அழைக்கப்படும் பில்லி, சூனியம் வைப்பது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.

இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதிபருக்கு எதிராகவே பெண் அமைச்சர் பில்லி, சூனியம் வைத்ததற்காக கைது செய்யப்பட்டது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version