Home இலங்கை அரசியல் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த ரணில்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த ரணில்

0

மாலைதீவின் (Maldives) முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் (Ibrahim Mohamed Solih), இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (15) கொழும்பில் (Colombo) இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இப்ராஹிம் முகமது சோலிஹ் மாலைதீவில் ஆட்சி நடத்தியபோது, அந்த நாடு இந்தியாவுக்கு ஆதரவான நாடாக இருந்தது.

எனினும் அவருக்கு பின்னால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி, ஆரம்பத்தில் இந்திய எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடித்த நிலையில், தற்போது அதில் தளர்வுப்போக்கை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க…..

https://www.youtube.com/embed/z_4Cs60OCN4

NO COMMENTS

Exit mobile version