Home முக்கியச் செய்திகள் இலங்கையின் சினிமா ராணி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் சினிமா ராணி தொடர்பில் வெளியான தகவல்

0

இலங்கையின்(sri lanka) சினிமா ராணி என்று அழைக்கப்படும் நடிகை மாலினி பொன்சேகா,(malini fonseka) உடல்நிலை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என்று அவரது உறவினர்கள் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிப்பு

அவர் நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பிற மருத்துவ நிலைமைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது குணமடைந்து வருவதாக குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர். 

NO COMMENTS

Exit mobile version