Home இலங்கை குற்றம் இரவில் நடந்த சோதனை! விமான நிலையத்தில் அதிரடியாக கைதான இளைஞர்

இரவில் நடந்த சோதனை! விமான நிலையத்தில் அதிரடியாக கைதான இளைஞர்

0

இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கை 

போதைப்பொருள் தடுப்பு

பொலிஸ், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்படி, நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version