தக் லைஃப்
மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ரசிகர்களின் கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க, நெட்டிசன்கள் இப்படத்தை இணையதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.
விஜய் விரும்பி சாப்பிடும் உணவு இதுதான்.. அவருடைய மாமா மகள் கூறிய விஷயம்
வசூல் விவரம்
தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
- முதல் நாள் – ரூ. 46 கோடி
- இரண்டாம் நாள் – ரூ. 6 கோடி
-
மூன்றாம் நாள் – ரூ. 15 கோடி
-
நான்காம் நாள் – ரூ. 7 கோடி
மொத்தமாக நான்கு நாட்கள் சேர்த்து உலகளவில் ரூ. 74 கோடி வசூல் தக் லைஃப் படம் செய்துள்ளது. முதல் நாளில் நல்ல வசூல் இருந்த நிலையில், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் படுமோசமாக குறைந்துள்ளது.
