Home இலங்கை குற்றம் தமிழர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தமிழர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

0

புதுக்குடியிருப்பு- வள்ளிபுனம் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (6) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

வள்ளிபுனம் பகுதியிலுள்ள வாக்கு
சாவடிக்கு அண்மித்த பகுதியில் வீட்டுசின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின்
ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம்
செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான
38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version