Home இலங்கை அரசியல் உள்ளூராட்சித் தேர்தலில் சஜித் பிரேமதாச வாக்களிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் சஜித் பிரேமதாச வாக்களிப்பு

0

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் வாக்களித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவும் அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும் இணைந்து வாக்களிப்பதற்காக வருகை தந்திருந்தனர்.

ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கொடுவேகொட விவேகாராம விகாரையின் சந்திரரத்ன பாலர் பாடசாலை மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் அவர்கள் இருவரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்திருந்தனர்.

அதிகரித்துள்ள ஆதரவு

வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்திக்கு பொதுமக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version