கடந்த 2024.11.12 அன்று இரவு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்
ஒருவரின் கொழும்பு துறையில் உள்ள வீட்டிற்கு சென்று, அவரது வேட்பாளரின் தந்தை
மீது தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அதே தினத்தில் மேலும் மூன்று வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.