Home உலகம் கனடாவில் கத்திக்குத்து தாக்குதல்: பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

கனடாவில் கத்திக்குத்து தாக்குதல்: பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

0

கனடாவின் (Canada) – ரொறன்ரோ (Toronto) நகரில் பெண்ணொருவர் வீட்டை உடைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

43 வயதான மேகன் கூடே என்ற பெண் பலவந்தமாக வீட்டுக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் தெரவித்துள்ளனர். 

மேலதிக விசாரணை

குறித்த பெண்ணை கைது செய்வதற்கான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்  சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தையும்  காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

5 அடி 6 அங்குலம் உயரத்தைக் கொண்ட குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் இருந்தால் காவல்துறைக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் இந்த பெண்ணுக்கும் சம்பவத்தில் காயம் அடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version