போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 124 ஆம் பிரிவை மீறி செயற்பட்டமை காரணமாக இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
