Home இலங்கை அரசியல் மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர : சஜித் குற்றச்சாட்டு

மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர : சஜித் குற்றச்சாட்டு

0

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் பதவிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் எதிர்பார்ப்பை அநுர குமார அழித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கிய தற்போதைய ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை உச்ச நிலைக்குக் கொண்டு வந்தார்.

மின் கட்டணம், உணவுப் பொருள் விலை

மின் கட்டணத்தை 66 சதவீதம் குறைக்கலாம் என்றும்
உணவுப்பொருட்களின் விலையையும் குறைப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தும் அவர் கூறியவாறு அவற்றை குறைக்கவில்லை.

இவற்றைச் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவையில்லை.

அதிக ஊழல் காரணமாகவே மின் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் தம்மால் தீர்க்க முடியும் என்றும் கூறினார்.

எனினும், ஆட்சிக்கு வந்து இன்று வரை அவரால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியவில்லை.

முதலாளித்துவ வர்க்கத்திற்கு சலுகை

பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதி எரிபொருள் விலை திருத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.

தேர்தல் காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை உச்சத்துக்குக் கொண்டு வந்து, இன்று ஆட்சிக்கு வந்ததும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்களின் அபிலாஷைகளை சிதைத்துள்ளார் என தெரிவித்தார். 

Source: https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-with-cardamom-1730555335

NO COMMENTS

Exit mobile version