Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆணின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆணின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு!

0

அம்பாறை (Ampara) மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொது மகனின் சடலம் நான்கு நாட்களின் பின்னர்
மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக
பயணம் செய்த கூலித்தொழிலாளி ஒருவர் வெள்ள நீரினால்
அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இலங்கை கடற்படையினர் 4 நாட்களாக
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது இன்று (29) திரவந்திய
மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில்  சடலத்தை மீட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சடலம் 

இவ்வாறு
மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது.

அங்கு காணாமல் சென்றவரின் உறவினர் சடலத்தை அடையாளம் காட்டினர்.

சடலமாக
மீட்கப்பட்டவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த 48 வயதான நாகலிங்கம் சுரேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் மீதான மேலதிக
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version