Home இலங்கை பொருளாதாரம் அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல் ஆரம்பம்

அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல் ஆரம்பம்

0

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக விலைமனு இன்று (29.11.2024) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா (Samitha Perera) குறிப்பிட்டுள்ளார்.

லங்கா சதொச

பல்வேறு கட்டங்களின் கீழ் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு முன்னர் அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் எதிர்பார்ப்புடன், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசியை லங்கா சதொச விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் ஊடாகவும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிருவனத்தின தலைவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version