Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அநுர அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அநுர அரசாங்கம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)  மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்ததாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு(Kehaliya Rambukwella) எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காக இவர்கள் அழைக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிஐடிக்கு அழைக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர்கள் 

குறித்த,  இம்யூனோகுளோபுலின் மருந்து மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் அமைச்சரவைப் பத்திரத்தை அங்கீகரித்த முன்னாள் அமைச்சர்கள் எட்டு பேர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் அமைச்சர்களான, பிரசன்ன ரணதுங்க,  ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க,  ரமேஷ் பத்திரன, விஜேதாச ராஜபக்ச, நளின் பெர்னாண்டோ  உள்ளிட்டவர்கள் இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. 

ரணிலும் தினேஷூம் அழைக்கப்படுவார்களா..

இந்த நிலையில், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவைக்கு  தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்  பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் விரைவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version