Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

0

நுவரெலியா – கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெதமுல்ல பிரதேசத்தில் நேற்று(30.11.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து
பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் பொருத்தப்பட்ட மின்சாரமே முதியவரை தாக்கியுள்ளது.

சுய தொழில் 

இவ்வாறு உயிரிழந்தவர் அதே தோட்டத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு
வந்தவர் எனவும் வழக்கம் போல விவசாய காணிக்கு செல்லும்போது
வழுக்கி மின்சார வேலியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாவலப்பிட்டி
நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸாருடன் நுவரெலியா
தடயவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version