Home இலங்கை சமூகம் கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த அனர்த்தம் : ஒருவர் பரிதாபமாக பலி

கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த அனர்த்தம் : ஒருவர் பரிதாபமாக பலி

0

மினுவாங்கொடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விளையாட்டின்போது நபரொருவர் காயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காவலதுறையினர் விசாரணை

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பலுகஹவெல – கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தெரியவருகையில், “விளையாட்டு போட்டியின் போது பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்வரின் சடலம் மினுவாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை காவலதுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்கது.

NO COMMENTS

Exit mobile version