Home இலங்கை அரசியல் சவுதியின் அமைச்சருடன் பேச்சு நடத்திய இலங்கையின் வெளியுறவு அமைச்சர்

சவுதியின் அமைச்சருடன் பேச்சு நடத்திய இலங்கையின் வெளியுறவு அமைச்சர்

0

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத் இன்று சவுதி அரேபியாவின் வெளியுறவு
அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின்
50 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக சவுதி அரேபியாவிற்கு அமைச்சர் ஹேரத் விஜயம் செய்துள்ளார்.

விவாதம்

இந்த நிலையில் இன்றைய சந்திப்பின்போது, இலங்கையில் சவுதி தனியார் துறை
முதலீட்டை அழைப்பது உட்பட அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது
குறித்து இரண்டு வெளியுறவு அமைச்சர்களும் விவாதித்தனர்.

அதேநேரம், பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வைத் தேடுவதில் சவுதி
அரேபியாவின் முன்னணி பங்கைப் பாராட்டிய அவர், பாலஸ்தீனத்திற்கான இலங்கையின்
ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version