Home இலங்கை குற்றம் பிரான்ஸிலிருந்து ஆபத்தான பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவருக்கு 12 வருட சிறை

பிரான்ஸிலிருந்து ஆபத்தான பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவருக்கு 12 வருட சிறை

0

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,000 போதை மாத்திரைகள் கொண்டு வந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பகுதியை சேர்ந்த எம்.எப்.எம். ஃபர்ஸான் என்ற நபருக்கே 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கடூழியச் சிறைத்தண்டனை

10.06.2020 அன்று சட்டவிரோத போதைப் பொருட்களைக் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version