Home இலங்கை சமூகம் மன்னாரில் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் என அடையாளப்படுத்தி நபரால் குழப்பம்

மன்னாரில் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் என அடையாளப்படுத்தி நபரால் குழப்பம்

0

மன்னார் (Mannar) நகரசபைக்கு சொந்தமான வீதியில் நடைபாதை நாள் சந்தை அடிப்படையில்
வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில்
உள் நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன் வியாபாரிகளை அச்சுறுத்தியதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் மீது
குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபையினால் ஆண்டுதோறும் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைக்கு என
உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை
அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம்முறை கடைகளை
குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.

வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதன் போது குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்த பெரும்பாலான நடைபாதை
வியாபாரிகள் அப்பகுதியில் இருந்து தாமாக நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக
வெளியேறியிருந்தனர்.

இருப்பினும் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து
இன்றையதினம் (16) காவல்துறையினர் மற்றும் நகரசபை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட
அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் அதிகாரிகளுடன் விதண்டாவாதத்தில்
ஈடுபட்டதுடன் அப்பகுதியில் இருந்த சில வியாபாரிகளுடன் முரண்பாட்டிலும்
ஈடுபட்டார்.

அதேநேரம் தான் அங்கே கதைத்த விடையங்களை ஒளிப்பது செய்வதை
தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் காணொளி எடுக்க முயன்ற ஊடகவியலாளரின்
தொலைபேசியையும் தட்டி விட முயற்சி செய்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாபரிகள் கோரிக்கை

அத்துடன் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற முடியாது எனவும், தான் அமைச்சர் மற்றும் ஆளுநரிடம் பேசிவிட்டதாகவும் கடிதம் மாலை வரும் எனவும்
தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும் ஆளுநர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு
வினவிய போது அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எந்த ஒரு
கட்சியின் அரசியல் வாதிகளும் ஆளுநரிடம் இது தொடர்பில் கதைக்கவும் இல்லை என
தெரிவித்திருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என தங்களை
அடையாளப்படுத்திக் கொண்டு சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்
என்பதுடன் இவ்வாறான பொய்யான விடயங்களை தெரிவித்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட
நபர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என பாதிக்கப்பட்ட
வியாபரிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version