Home இலங்கை குற்றம் யாழ். சுழிபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!

யாழ். சுழிபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில்
கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒருபோத்தல் கசிப்பு மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து,கைது செய்யப்பட்ட  சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைகளுக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version