புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(24.03.2025) முதல் நாடளாவிய ரீதியில் உணவு விற்பனை நிலையங்கள் சோதனையிடப்படவுள்ளன.
உதாரணமாக, இந்த நாட்களில் குறைந்த தரம் அல்லது மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் விற்கப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆபத்தான இரசாயனங்கள்
அத்துடன், மசாலாப் பொருட்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருக்கலாம் எனவும் உபுல் ரோஹன் கூறியுள்ளார்.
