Home இலங்கை குற்றம் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்! விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருள்

போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்! விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருள்

0

இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (08) பிற்பகல் ராகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

சந்தேகநபர், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். இந்த சோதனையில் 9 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், 04.06.2025 அன்று ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, 1,800,000 ரூபா பெறுமதியுடைய முச்சக்கர வண்டியைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இவரென்பது தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version