குருநாகல் – பிங்கிரியவின் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டு
வரும், சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கோர்ப்பரேசன் (பிரைவேட்) லிமிடெட் (The Synergy Pharmaceuticals Corporation (Pvt) Ltd தொழிற்சாலையின்
கட்டுமானப்பணிகள் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளன.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிர்மாணத்தை அண்மையில்
பார்வையிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆரம்ப உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த தொழிற்சாலை,
இலங்கையின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தி ஆலையாக மாற உள்ளதாக,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
