கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொட, வெதமுல்ல பகுதியில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் நபர் ஒருவர் ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாக்குவாதத்தில் கொலை
கொலை செய்யப்பட்ட நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலையில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கைது செய்ய பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
