சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில்
வைத்து யானை தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த
சிவக்கொழுந்து இராசரெத்தினம் (வயது 75) என சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் , தனது வயலுக்கு குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம்
வீதியில் யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே
உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.
