Home சினிமா Jinn The Pet திரை விமர்சனம்

Jinn The Pet திரை விமர்சனம்

0

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் நடிப்பில், டி.ஆர்.பாலா இயக்கத்தில் இந்த சம்மரில் குழந்தைகள் கொண்டாடும் படமாக கொடுக்க முயற்சித்துள்ள இந்த ஜின் தி பெட் ரசிகர்கள், குழந்தைகளை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜின்-யை ஒரு பெண் உடலில் இருந்து, சில மந்திரங்கள் செய்து பிரித்து ஒரு பாக்ஸில் அடைக்கின்றனர், கதை அப்படியே தற்போது உள்ள காலகட்டத்திற்கு வருகிறது.

முகென் மலேசியாவில் ஒரு மியுஸிக் பேண்ட் வைத்து நடத்தி வருகிறார். அங்கு அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு தமிழகம் திரும்ப முடிவெடுக்க, ஒரு கடைசியில் இந்த ஜின் அடைத்திருக்கும் பெட்டியை பார்க்கிறார்.

அந்த பெட்டியில் கை வைத்ததுமே அவருக்கு 5 லட்சம் பரிசு வர, லக்கி என்று நினைத்து அந்த ஜின்-யை வீட்டில் வளர்க்க எடுத்து வருகிறார்.

ஆனால், இந்த ஜின் முகென் தவிற அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் துன்பத்தை கொடுக்க, அந்த ஜின்-யை ஒரு கட்டத்தில் முகென் வெளியே தூக்கி எறிகிறார். இதனால் அந்த ஜின் முழு உருவம் பெற பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இந்த படத்தின் ப்ரோமோஷனிலேயே இயக்குனர் ஒரு நடிகர் என்னை அவமானப்படுத்தினார் என பற்ற வைக்க, அந்த நடிகர் எஸ்.ஜே சூர்யா என சொல்ல, அதற்கு எஸ் ஜே சூர்யாவும், அட நான் மரியாதை ஆக தான் நடிக்க முடியாது என வாய்ஸ் நோட் கொடுக்க என பரபரப்புடனே படம் ரிலிஸாகியுள்ளது.

ஜின் கிட்டதட்ட ஒரு குட்டி சாத்தான் கான்செப்ட், கண்டிப்பாக பந்தயம் அடிக்க வேண்டிய கான்செப்ட். ஆனால், அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அப்படி எடுத்துள்ளார்கள்.

ஜின் முகென் வீட்டிற்கு வந்தவுடன் எத்தனை திரில், அது வீட்டில் அடிக்கும் லூட்டி என கொண்டு போய் இருந்திருக்கலாம், ஆனால், முகென் காதல் காட்சிகளே முதல் பாதி முக்கவாசி வந்து பொறுமையை சோதிக்கிறது.

ஆறுதலே பாலசரவணன் தான், அவர் வரும் காட்சிகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது, அதை தாண்டி படத்தில் பலரின் நடிப்பும் செயற்கைத்தனம் தான்.

அதிலுன் முகென் அக்காவிற்கு குழந்தை பிறந்தது போல் ஒரு காட்சி, குழந்தையே இல்லாமல் இவர் வெறுமென குழந்தை இருப்பது போல் நடிக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கிற குழந்தைக்கு கூட தெரிந்துவிடும் போல. இரண்டாம் பாதியில் தான் ஜின் முழு உருவம் பெறுகிறது, அதற்கு கார்டூன் மோடு, பட்லூ வாய்ஸ் போல் வருகிறது.

ஆனால், உருவம் பார்த்தால் எதோ அரக்கண் போல் கொடுத்துள்ளார்கள், அது எப்படி குழந்தைகளை கவரும்.

இப்படி பல குறைகளே படம் முழுவதும் நிரம்பி வழிய, விவேக்-மெர்வின் இசை பரவாயில்லை ரகம்.

க்ளாப்ஸ்

கான்செப்ட்

பாலசரவணன் காமெடி


பல்ப்ஸ்

திரைக்கதை, செயற்கை தனமான நடிப்பு.

பொறுமையை சோதிக்கும் முதல் பாதி.

மொத்தத்தில் இந்த ஜின் தி பெட்-ல் SJ சூர்யா தப்பித்து விட்டார், நாம் மாட்டிக்கொண்டு விட்டோம்.

NO COMMENTS

Exit mobile version