Home இலங்கை சமூகம் சிறுவனிடம் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி

சிறுவனிடம் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி

0

திருகோணமலை பகுதியில் இலஞ்சம் பெற்ற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவரே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடர்புடைய தரப்பினர் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..

மேலும், சந்தேக நபர் திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version