Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் விருந்தில் நடந்த பயங்கரம் – ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

தென்னிலங்கையில் விருந்தில் நடந்த பயங்கரம் – ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

0

பாணந்துறை, ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் T56 துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பணியகம்

பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் இது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கி தப்பிச் செல்ல உதவிய சந்தேக நபரைக் கைது செய்து ஹிரான பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர் பாணந்துறை, மொரவின்ன பகுதியை சேர்ந்த 40 வயதுடையவராகும். சம்பவம் குறித்து ஹிரான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version