Home இலங்கை குற்றம் தலைமன்னாரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்

தலைமன்னாரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்

0

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட
ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவில் பூலார்
குடியிருப்பு காட்டுப் பகுதியில் கடந்த மாதம் 19ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம்
கண்டுபிடிக்கப்பட்டது.

அடையாளம் காண.. 

இந்தச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் பொது
வைத்திசாலையின் பிரேத அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அல்லது விவரத்தை அறிய விரும்புவர்கள்
தலைமன்னார் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

இது வரையில் இந்தச் சடலத்தைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில்
இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தகவல் தெரிந்தவர்கள்
உடனடியாக அறியத் தரவும் என மன்னார் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி
கேட்டுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version