மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி
உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் நேற்று (08)
காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
பட்டதாரிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டு
கடமையாற்றிவருபவர்களின் பட்டதாரிகள் ஒன்றியம் கவனயீர்பு
ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து காந்தி பூங்காவில் முன்னாள் இன்று காலை 9.000 மணிக்கு ஒன்று
திரண்ட நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பட்டம் பெற்ற எங்களை ஏன் மட்டம்
தட்டுகின்றீர்கள் என
பல சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலயம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
