Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

தமிழர் பகுதியில் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

0

கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வாய்க்கால் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணேசபுரம் பகுதியில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர் வடிகால் வாய்க்காலில் இருந்தே இன்று (25) காலை குறித்த சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது.

சடலத்தை அவதானித்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை

குறித்த சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி என்ற 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் கிளிநொச்சி மாவட்ட பரந்தன் விவசாய திணைக்களத்தில்அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரண விசாரணை

மரணம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் சிவபால
சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சென்று நிலமையை ஆராய்ந்த பின்னர் மரண விசாரணைக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி குற்றத்தடுப்புப் பிரிவினர் பூர்வாங்க விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் விபத்தினால் குறித்த மரணம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version