பிரியங்கா தேஷ்பாண்டே
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றிருந்த பிரியங்கா, அங்கிருந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
சீதாவின் திருமணத்தால் முத்து மீனா இடையே விரிசல் ஏற்படுமா! சிறகடிக்க ஆசை வரும் வார ப்ரோமோ
பிரியங்கா வெளியிட்ட போட்டோ
இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார். அந்த வகையில் நேற்று திடீரென ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டில் ‘உங்க வாய் உங்க உருட்டு’ என உள்ளது. இதை அவர் யாருக்காக சொல்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
