Home இலங்கை சமூகம் மன்னாரில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் பலி !

மன்னாரில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் பலி !

0

மன்னார் (Mannar) மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17) பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளின் தந்தை

இந்தநிலையில், பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்குள் ஒரு வாரத்திற்கு மேலாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/man-suicide-in-mannar-1718708499

NO COMMENTS

Exit mobile version