Home இலங்கை சமூகம் யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம்(Jaffna)- நீர்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (23)  அச்செழு- நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

குறித்த நபர் இன்றையதினம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு
வாழைக்குலையை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்தநிலையில், அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர்
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது சடலம் மீதான மரண
விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இருதய வால்வு சுருக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version