Home முக்கியச் செய்திகள் 41 வயது நபர் வெட்டிக் கொலை! 50 பேர் கொண்ட கும்பலால் வீடு தீக்கிரை

41 வயது நபர் வெட்டிக் கொலை! 50 பேர் கொண்ட கும்பலால் வீடு தீக்கிரை

0

தனிப்பட்ட தகராறு முற்றியதால் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று மத்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16) இரவு 11.40 மணியளவில் மத்துகம – வோகன்வத்த, மேல் பிரிவு பகுதியில் இடம்பெற்றுள்ளது

அதே பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

கொலையைச் செய்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இக்கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தொடாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரின் வீட்டிற்கு, இன்று (17) காலை வேளையில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் சென்று தீ வைத்து எரித்து நாசமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NO COMMENTS

Exit mobile version