Home இலங்கை சமூகம் கடற்றொழிலில் ஈடுபட்டவர் பரிதாப மரணம்

கடற்றொழிலில் ஈடுபட்டவர் பரிதாப மரணம்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில்
பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரான கணேசமூர்த்தி
குலேந்திரன் எனும் 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை

நேற்றைய தினம் (11.12.2024) ஆற்றில் மீன்பிடிக்க சென்ற பொழுது வலிப்பு
ஏற்பட்டதன் காரணமாக நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version