Home முக்கியச் செய்திகள் வைத்தியர் அர்ச்சுனா எம்.பியின் அசிங்கங்கள்

வைத்தியர் அர்ச்சுனா எம்.பியின் அசிங்கங்கள்

0

யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அரச்சுனாவின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள் வெளியாகி முகத்தை சுழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாவலருடன் முரண்படும் அவர் தன்னை அவர்கள் படம் எடுக்க முடியாது எனவும் தான் யார் தெரியுமோ என அதட்டும் காணொளியும் வைரலாகி வருகிறது.

அதேபோன்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் அலுவகத்திற்குள் சென்ற அவர் தன்னை ‘சேர்’என அழைக்க வேண்டும் என தானாகவே கேட்கும் காணொளியும் வெளியாகி மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அதற்குரிய பண்புடன் நடந்து கொள்ளவேண்டும். ஒருவரின் நடத்தையிலேயே அவரை சேர் என அழைப்பதா இல்லையா என்பது முடிவு செய்யப்டும்.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே தன்னை சேர் என அழைக்க கோருவது எந்த வகையில் நியாயம் என கேட்கின்றனர் மக்கள்.

அவரைத் தெரிவு செய்த மக்களுக்கு இப்பொழுது புரியும் ஏன்தான் இவரை தெரிவு செய்தோமென்று…   

https://www.youtube.com/embed/-1c-NgbfvKo

NO COMMENTS

Exit mobile version