Home இலங்கை சமூகம் யாழில் 2 இலட்சத்துக்கு அதிக தொகையில் விற்பனையான மாம்பழம்

யாழில் 2 இலட்சத்துக்கு அதிக தொகையில் விற்பனையான மாம்பழம்

0

யாழ்ப்பாணம்(Jaffna) புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின்
05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46
ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

கடந்த 22.01.2025அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025
அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றுள்ளது.

இலட்சத்தில் விற்பனையான மாம்பழம்

இங்கு விஷேட அபிஷேக ஆராதனை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக
வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில்
விற்பனையாகியுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் தரப்பினர் இவ் மாம்பழத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version