Home இலங்கை சமூகம் யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை

யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக இரண்டு மணிநேரம் விசாரணை

0

மருத்துவமனைக்குள் அனுமதியின்றி சென்று செய்தி சேகரித்தார் என்ற
குற்றச்சாட்டில் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ். மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாடே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

“சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு 

ஒரு சில தினங்களிற்கு முன்னர் வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த
கடற்றொழிலாளி ஒருவர் கடலில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றின்போது காயமடைந்த
நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்
அந்த நபரை பார்வையிடுவதற்க்காக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று
மருத்துவமனை உத்தியோகத்தர்களிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை உத்தியோகத்தர்கள் பார்வை நேரத்திற்கு முன் விடுதியில்
நோயாளர்களை பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பொறுப்பு மருத்துவரின்
அனுமதியை பெற்று காயமடைந்த நபரை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் சக ஊடகவியலாளர் ஒருவருடன் மருத்துவமனை
பொறுப்பு மருத்துவரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில் பொறுப்பு மருத்துவர் ஊடகவியலாளர்களுக்கு பார்வை
நேரத்திற்கு முன் பார்வையிட அனுமதிக்காத நிலையில் வளாகத்திலிருந்து
வெளியேறியதாக கூறப்படுகிறது.

இரண்டு மணிநேரம்  விசாரணை

எனினும், ஊடகவியலாளர்கள் கடலில்
காயமடைந்தவர் தொடர்பான செய்தியை, அவர் மருத்துவமனையின் விடுதியில் தங்கியிருந்த
புகைப்படத்துடன் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

குறித்த செய்தியை பார்வையிட்ட. பொறுப்பு மருத்துவர் பிரதேச ஊடகவியலாளர்
மரியசீலன் திலெக்ஸ்க்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று இரண்டு மணிநேரம் மரியசீலன்
திலெக்ஸ் மீது விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version