Home இலங்கை அரசியல் ஆளும் தரப்பின் திட்டமிட்ட சதியால் இழைக்கப்பட்ட அநீதி..!! நீதி கோரிய மணிவண்ணன்!

ஆளும் தரப்பின் திட்டமிட்ட சதியால் இழைக்கப்பட்ட அநீதி..!! நீதி கோரிய மணிவண்ணன்!

0

யாழ். மாநகரசபைக்கான தங்களுடைய வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமையின் பின்னணயில் ஆளும் தரப்பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “மிக தவறான விடயங்களை சுட்டிக்காட்டி எங்களுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு திட்டமிட்ட சதியாக கூட இருக்கலாம் என்பது எங்களுடைய கருத்து. காரணம், யாழ். மாநகர சபையிலே மிகவும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு தரப்பினராக நாங்கள் இருக்கின்றோம். 

எனவே, எங்களை இதிலிருந்து அகற்றி விட்டால், தங்களுடைய வெற்றியை இலகுவாக்கிக் கொள்ளலாம் என்று ஆளும் தரப்பு கருதுவதாகவே நாங்கள் நினைக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version