விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென், சேத்தன், ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை 1.
இப்படத்தை தொடர்ந்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் உருவானது. இன்னும் சில தினங்களில் அதாவது வரும் 20 – ம் தேதி விடுதலை 2 வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.. ரகசியத்தை உடைத்த ஜிவி பிரகாஷ்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மஞ்சு வாரியர் படத்தின் கதாநாயகன் குறித்தும் கேரளாவில் அவருக்கு இருக்கும் கிரேஸ் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ரகசியம்
அதில், ” எனக்கு ரொமாண்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. தற்போது, விடுதலை படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.
கேரள பெண்களிடம் அவர்களுக்கு பிடித்த ரொமாண்டிக் ஹீரோ குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஜய் சேதுபதி தான் முதலிடம். அவருக்கு அங்கு நிறைய ரசிகைகள் உள்ளனர்” என்று கூறியுள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த விஜய் சேதுபதி அவருக்கு வெட்கம் வருவதாக கூறியுள்ளார்.