Home சினிமா சீரியல் நடிகையை கத்தியால் குத்திய அவரது கணவர்… மருத்துவமனையில் பரிதாபமான நிலையில் நடிகை

சீரியல் நடிகையை கத்தியால் குத்திய அவரது கணவர்… மருத்துவமனையில் பரிதாபமான நிலையில் நடிகை

0

சீரியல் நடிகை

சீரியல் நடிகைகள் என்றாலே மக்களிடம் மிகவும் பிரபலம். கன்னடத்தில் டெய்லி சோப் அம்ருத்தாரே மூலம் பிரபலமானவர் மஞ்சுளா ஸ்ருதி, நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் அம்ரேஷ் என்பவரை காதலித்து 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆட்டோ டிரைவரான அம்ரேஷ், பணம் மற்றும் பிற வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக தனது மனைவி மஞ்சுளாவை தொந்தரவு செய்யத் தொடங்கினார். இதனால், நடிகை மஞ்சுளா ஸ்ருதி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார், சமீபத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தனர் என கூறப்படுகிறது.

சோகமான சம்பவம்

கடந்த ஜுலை 4ம் தேதி, மஞ்சுளா வீட்டின் கதவை தட்டியுள்ளார் அவரது கணவர்.

நடிகை கதவை திறந்ததும் அவரது கணவர் மிளகு ஸ்ப்ரேயை முகத்தில் அடித்து தலைமுடியைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு கையில் வைத்திருந்த கத்தியால், மார்பு, கழுத்து மற்றும் விலா எலும்புகளில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ

நடிகையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பதறி ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார் நடிகை. உடனே அவரை மீட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.     

NO COMMENTS

Exit mobile version